search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினேஷ் போகத்"

    விளையாட்டுத்துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை இந்திய மல்யுத்த பெடரேசன் பரிந்துரை செய்துள்ளது. #WFI #KhelRatna
    விளையாட்டுத்துறையில் சாதனைக் படைக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கும்.

    இந்த விருதுகளுக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அந்தந்த விளையாட்டுத்துறை மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும். அதன்படி இன்று இந்திய மல்யுத்த பெடரேசன் கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.


    வினேஷ் போகத்

    ராகுல் அவேரா, ஹர்ப்ரீத் சிங், திவ்யா கக்ரன், பூஜா தண்டா ஆகியோர் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. விரேந்தர் குமார், சுஜீத் மான், நரேந்திர குமார் மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் பெயர்களை துரோணாச்சாரியார் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    நேற்றுடன் முடிவடைந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #AsianGames2018
    ஜகர்த்தா :

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர்களுக்கான 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தமிழக வீரர்கள் அய்யாச்சாமி, தருன் ஆரோக்கிய ராஜ் உள்பட 4 பேரை உள்ளடக்கிய இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதகத்தை வென்றது.

    முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி மற்றும் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

    மற்றொறு போட்டியான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். ஹாக்கி போட்டியில் ஆண்கள் அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. மலேசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 6-7 என்ற கணக்கில் ( பெனால்டி ஷூட்அவுட்) தோல்வியை தழுவியது.

    தொடக்க ஆட்டங்களில் இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கிலும், ஹாங்காங்கை 26-0, ஜப்பான் அணியை 8-0, கொரியாவுக்கு எதிராக 5-3, இலங்கைக்கு எதிராக 20-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றியை தனதாக்கியிருந்தது இந்தியா.

    இதனால் இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டம், இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த மலேசியாவை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், விறுவிறுப்பு அடங்கிய இன்றை ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற்றது.

    இதனால், 13 தங்கம், 21 வெள்ளி, 22 வென்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. #AsianGames2018 #VineshPhogat
    சன்டிகார் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரியானா வீரர் பஜ்ரங் புனியாவுக்கு (65 கிலோ பிரிஸ்டைல்) அம்மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துவிட்டது.

    அம்மாநிலத்தை சேர்ந்த வினேஷ் போகத் பெண்களுக்கான 50 கிலோ பிரிஸ்டைலில் 2-வது தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். வினேஷ் போகத்துக்கும் அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. இதேபோல துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அரியானா வீரர் லக்ஷாய் ஷெரோனுக்கு ரூ.1½ கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. #AsianGames2018 #VineshPhogat
    ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். இதில் 6-2 என இந்திய வீராங்கனை வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.



    முதல் ரவுண்டில் 4-0 என வினேஷ் போகத் முன்னிலைப் பெற்றார். 2-வது சுற்று 2-2 என டிராவில் முடிந்தது. ஒட்டுமொத்தமாக 6-2 என வெற்றி பெற்றார். இந்த தங்கத்துடன் இந்தியா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது.



    50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் முதல் வீராங்கனை இவராவார்.
    மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த யாக்சிமுராடோவா-வை எதிர்கொண்டார். இதில் 10 - 0 என வெற்றி பெற்று வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.



    இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் வினேஷ் போகத் வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவில் முன்னணி வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் 7-9 எனத் தோல்வியடைந்தார். என்றாலும் இன்னொரு போட்டியில் வெற்றி பெற்றால் வெண்கலம் வெல்ல வாய்ப்புள்ளது.
    ×